×

மீஞ்சூர் பேரூராட்சியில் பொது கழிப்பிடம் கட்ட சப்-கலெக்டரிடம் எம்எல்ஏ மனு

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் பொது கழிப்பிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய பொன்னேரி சப் கலெக்டரிடம் துரை சந்திரசேகர் எம்எல்ஏ கோரிக்கை மனு கொடுத்தார். மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது கழிப்பிடம் இல்லை என அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர். சட்டமன்றத் தேர்தலின்போது அப்போது திமுக கூட்டணி வேட்பாளராக தேர்தலில் நின்ற துரை சந்திரசேகரிடம் பொது கழிப்பிடம் கட்டித் தருமாறு மீஞ்சூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று துரை சந்திரசேகர் எம்எல்ஏவாக ஆனார்.

இதனை தொடர்ந்து, இந்த கோரிக்கையை வழியுறுத்தி தொடர் போராட்டமும் நடத்தப்பட்டது. எனவே, இரண்டரை வருடங்களாக அப்பகுதியில் கழிப்பிடம் இல்லை கட்டுவதற்கான போதுமான இடம் தேர்வு செய்ய வேண்டும் என துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மோகன்ராஜ், வார்டு உறுப்பினர் அபுபக்கர், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி கதிர்வேல் ஆகியோர் இடத்தினை தேர்வு செய்து தருமாறு நேற்றுமுன்தினம் மாலை பொன்னேரி சப் – கலெக்டர் வாஹே சங்கேத் பல்வந்த்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்று கொண்டவர் உடனடியாக வட்டாட்சியர் மதிவாணனிடம் இது குறித்து கேட்டறிந்து பரிசீலனைக்கு பின் இடத்தினை தேர்வு செய்யப்படும் என சப் – கலெக்டர் தெரிவித்தார்.

The post மீஞ்சூர் பேரூராட்சியில் பொது கழிப்பிடம் கட்ட சப்-கலெக்டரிடம் எம்எல்ஏ மனு appeared first on Dinakaran.

Tags : MLA ,Meenjoor ,Ponneri ,Durai Chandrasekhar ,Dinakaran ,
× RELATED முன்னாள் திமுக அமைச்சர் க.சுந்தரம்...