×

வரும் 18ம்தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதியினை திறந்து வைப்பதற்காக, வரும் 18ம்தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய திமுக செயற்குழு கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவருமான கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சிவபாதம், பொடவூர் ரவி, சந்தவேலூர் சத்யா, மாவட்ட கவுன்சிலர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர் தங்கும் விடுதியினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 18ம்தேதி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். விழாவிற்காக, ஸ்ரீபெரும்புதூர் வருகை புரியும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிளைகளிலும் இளைஞர் அணி, மகளிர் அணி, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், ஒன்றிய இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வரும் 18ம்தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Sriperumbudur ,DMK ,Vallakottai ,M. K. Stalin ,Sriperumbudur North ,Tamil ,Nadu ,M.K. ,K.Stalin ,Dinakaran ,
× RELATED அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச்...