- தி.மு.க.
- காட்டாகுளத்தூர் ஒன்றியம்
- அமைச்சர்
- தமோ அன்பரசன்
- குடவாஞ்சேரி
- துணை தலைவர்
- இளங்கோவன்
- காட்டாங்குளத்தூர் ஒன்றியம்
- காடாங்குளத்தூர் ஒன்றியம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- உதய கருணாகரன்
- யூனியன் கமிட்டி
- ஜனாதிபதி
- வண்டலூர்
- துணை ஜனாதிபதி
கூடுவாஞ்சேரி: காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஒன்றிய துணை சேர்மன் இளங்கோவனுக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாழ்த்து தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஒன்றிய குழு பெருந்தலைவராக உதயா கருணாகரனும், துணை தலைவராக வண்டலூர் ஆராமுதனும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை சேர்மன் ஆக பணியாற்றி வந்த ஆராமுதன் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி மர்மம் கும்பல் வெட்டி கொலை செய்தது. இதனால் அந்த பதவிக்கான மறைமுக தேர்தல், கடந்த 6ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ரத்தினமங்கலத்தை சேர்ந்த ஏவிஎம் இளங்கோவன் ஒன்றிய துணை சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசனை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அவருடன் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆத்தூர் சந்தானம், ஒன்றிய சேர்மன் உதயாகருணாகரன் உட்பட ஏராளமான உடனிருந்தனர். மேலும், ஒன்றிய துணை சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏவிஎம் இளங்கோவனுக்கு அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் புதிதாக திமுக ஒன்றிய துணை சேர்மன் தேர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாழ்த்து appeared first on Dinakaran.