அதன்படி, கடந்த 2016ம் ஆண்டு 25 மாவட்டங்களில் 54 அமுதம் துறைசார் பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டது. எஞ்சிய 46 அமுதம் பல்பொருள் அங்காடியை திறப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக 20 அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்பட உள்ளன. எஞ்சிய 26 அமுதம் பல்பொருள் அங்காடிகளும் விரைவில் திறக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 100 அமுதம் பல்பொருள் அங்காடிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் பல்பொருள் அங்காடியை நவீனமயமாக்கும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்திடவும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்கென சாய்வுதள பாதை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post 100 அமுதம் பல்பொருள் அங்காடிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன: உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.