கறவைகளுக்கு அவசர சிகிச்சை மையம் பாரத் நுண் நிதி நிறுவனத்துடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: பாரத் நுண்நிதி நிறுவனமும், இண்டஸ்இண்ட் வங்கியும் தங்களது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி மூலம் பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்களின் மூலம் அவர்களின் இல்லத்திற்கே சென்று அவசர சிகிச்சை அளித்திட சிகிச்சை உள்ளீட்டு மையம் ஆவின் நிறுவனத்தில் அமைக்க ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி உள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளை வலுப்படுத்த தற்போது மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் திறன் மேம்பாட்டு மையத்தில் சுமார் 25 பணியாளர்களை கொண்டு சிகிச்சை உள்ளீட்டு மையம் விரைவில் அமைப்பது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாரத் நுண்நிதி நிறுவனம் சார்பில் கிஷோர் சாம்பசிவம் மற்றும் இதர அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சிகிச்சை உள்ளீட்டு மையத்தின் பயனை, கால்நடை மருத்துவரின் உதவியை அவசர காலத்தில் நாடும் பால் உற்பத்தியாளர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல், கறவை மாடுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

The post கறவைகளுக்கு அவசர சிகிச்சை மையம் பாரத் நுண் நிதி நிறுவனத்துடன் அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: