×

ராஜஸ்தான் பாஜ எம்எல்ஏ மரணம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சலும்பார் சட்டமன்ற தொகுதியின் பாஜ எம்எல்ஏ அம்ரித் லால் மீனா(65). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் உதய்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இவர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தலைவர் மற்றும் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். எம்எல்ஏ அம்ரித் லால் மறைவுக்கு முதல்வர் பஜன்லால் சர்மா, பாஜ மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ராஜஸ்தான் பாஜ எம்எல்ஏ மரணம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan BJP MLA ,Jaipur ,Amrit Lal Meena ,BJP MLA ,Salumbar ,Rajasthan ,Udaipur Government Hospital ,
× RELATED ராஜஸ்தானில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!!