கோவை தனியார் கல்லூரி ஊழியருக்கு அடித்த அதிர்ஷ்டம் போனில் கடன் சொல்லி வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு : கடை உரிமையாளருக்கு பாராட்டு

திருவனந்தபுரம்: கோவை தனியார் கல்லூரி ஊழியர், லாட்டரி கடைக்காரரிடம் போனில் பேசி கடன் சொல்லி வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.75 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த வினயகிருஷ்ணன் அங்குள்ள புதிய பஸ் நிலையம் அருகே லாட்டரிக் கடை வைத்து உள்ளார். நடுவண்ணூர் பகுதியை சேர்ந்த ராகேஷ்குமார் என்பவர் இவரது கடையில் அடிக்கடி டிக்கெட் வாங்குவது வழக்கம்.

இவர் கோவையிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதி கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் கோவையில் இருந்து வினயகிருஷ்ணனுக்கு போன் செய்த ராகேஷ்குமார், என்னென்ன லாட்டரி டிக்கெட்டுகள் உள்ளன என்று கேட்டுள்ளார். அப்போது ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் 18 டிக்கெட்டு விற்காமல் உள்ளது என்றும், சிறிது நேரத்தில் குலுக்கல் நடக்க உள்ளது என்றும் கூறியுள்ளார்.

உடனே 18 டிக்கெட்டுகளையும் நான் வாங்கி கொள்கிறேன், ஊருக்கும் வரும்போது பணம் தருகிறேன் என்று ராகேஷ்குமார் கூறியுள்ளார்.  அதன்படி 18 டிக்கெட்டுகளையும் வினயகிருஷ்ணன் எடுத்து வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குலுக்கல் நடந்தது. ராகேஷ்குமாருக்காக எடுத்து வைத்த ஒரு டிக்கெட்டுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசு விழுந்தது. இதையடுத்து ராகேஷ் குமாரை நேரில் வரவழைத்து பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வினயகிருஷ்ணன் கொடுத்துள்ளார். அவரது ேர்மையை அப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் பாராட்டினர்.

The post கோவை தனியார் கல்லூரி ஊழியருக்கு அடித்த அதிர்ஷ்டம் போனில் கடன் சொல்லி வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு : கடை உரிமையாளருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: