கிராம சபைகளில் மதுக்கடைகளை மூட தீர்மானம்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய விடுதலை நாளையொட்டி, வரும் 15ம் நாள் காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைக் கூட்டங்கள் தான் அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான ஊடகம்.

அந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள் தான் உண்மையான விடுதலை நாள். எனவே, ஆகஸ்ட் 15ம்தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், மாநிலம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

The post கிராம சபைகளில் மதுக்கடைகளை மூட தீர்மானம்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: