×

விஞ்ஞான் ரத்னா விருது கோவிந்தராஜன் பத்பநாபனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தரான கோவிந்தராஜன் பத்பநாபன் ஒன்றிய அரசால் விஞ்ஞான் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அறிவியல்-தொழில்நுட்பத்துறையில் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்புக்கு கிடைத்திருக்கும் விஞ்ஞான் ரத்னா விருதினால் அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கோவிந்தராஜன் பத்பநாபனை தமாகா சார்பில் பாராட்டி வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

The post விஞ்ஞான் ரத்னா விருது கோவிந்தராஜன் பத்பநாபனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags :
× RELATED விருது பெற்றோரின் போராட்ட வரலாறு: முதல்வர் புகழுரை