×

மனைவியை நிர்வாண படம் எடுத்து விபசாரத்தில் தள்ளிய கணவன் கைது: பரபரப்பு வாக்குமூலம்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே திருமணமான 4 மாதத்தில், நிர்வாண படம் எடுத்து மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு, சேலம் உடையாபட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 3ம் தேதி, ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண், 5ம்தேதி மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பெற்றோர், அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கண்ணீருடன் அவர் போலீசில் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அதில், சேலத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில், வாட்ச்மேனாக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வனுடன் எனக்கு 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தோம். நாங்கள் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, எனக்குத் தெரியாமல் எனது நிர்வாண படங்களை கணவர் செல்போனில் எடுத்துள்ளார்.

இதையறிந்த நான் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, அவருடன் நெருங்கி பழகும் பல பெண்களின் நிர்வாண படங்களையும் அதில் வைத்திருந்தார். மேலும், அந்த ஆபாச படங்களை தனக்கு தெரிந்த பல ஆண்களிடம் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதனை தட்டிக்கேட்ட என்னை, அவர் அடித்து துன்புறுத்தினார். மேலும், எனது படத்தையும் பலருக்கு அனுப்பி, ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, பகலிலேயே அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள சொல்லி, அடித்து கொடுமைப்படுத்தினார். அதனையும் படமாக எடுத்து வைத்துள்ளார். இதனை பெற்றோரிடம் சொன்னால், அவர்களையும், என்னையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்.

அதனால், நான் பயந்துபோய் எனது குடும்பத்தாரிடம் சொல்லாமல் இருந்தேன். ஆடிப்பண்டிகைக்கு அம்மா வீட்டிற்கு வந்த போது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரிந்துவிட்டது. வீட்டிற்கு வந்த கணவன் தமிழ்ச்செல்வனை என் பெற்றோர் தட்டிக்கேட்டனர். இதனால், தெருவில் உள்ளவர்களுக்கும் விஷயம் தெரிந்து விட்டதால், அவமானமடைந்த நான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன் எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து மகளிர் போலீசார், அப்பெண்ணின் கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் உல்லாசமாக இருந்த 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கணவன் தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வந்தநிலையில், நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். மேலும், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நடராஜன் (42) என்ற தொழிலாளியையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான தமிழ்ச்செல்வனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், எனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்தேன். பிறகு அதனை பார்த்து ரசித்திருக்கிறேன். பிறகு தெரிந்த நபர்களுக்கு அனுப்பி, அவர்களை வரவழைத்து, மனைவியுடன் உல்லாசமாக இருக்கச் செய்தேன். இதற்காக பணம் பெற்றுக்கொண்டேன், என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான தமிழ்ச்செல்வன், நடராஜனை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post மனைவியை நிர்வாண படம் எடுத்து விபசாரத்தில் தள்ளிய கணவன் கைது: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Atur ,Aathur ,Mullaiwadi ,Salem district 21 ,
× RELATED மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்