- கோயம்புத்தூர்
- மேட்டுப்பாளையம்
- தேகம்பட்டி
- நெல்லித்துரை
- ஓடந்துறை
- சமயபுரம்
- தாசம்பாளையம்
- குட்டைபுத்தூர்
கோவை: கோவை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, சமயபுரம், தாசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனத்தையொட்டி உள்ளதால் இப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் தேக்கம்பட்டி அடுத்துள்ள குட்டைப்புதூரில் தனியார் எஸ்டேட்டை ஒட்டிய விளைநிலங்களில் மூன்று காட்டு யானைகள் நேற்று மாலை முதல் முகாமிட்டன.
தொடர்ந்து அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதம் செய்ததோடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் இன்று அதிகாலை வரை யாரும் வராததால் விவசாயிகளே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
The post விளைநிலத்தில் காட்டு யானைகள் முகாம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.