×

17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கக்கோரி சவுக்கு சங்கர் மனு..!!

சென்னை: தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்கு பதியப்பட்டதா என காவல்துறை பதிலளிக்க கோர்ட் அவகாசம் விதித்துள்ளது. சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கக்கோரி சவுக்கு சங்கர் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Shankar ,CHENNAI ,Chav Shankar ,Chennai High Court ,Chavku Shankar ,Dinakaran ,
× RELATED சொற்பொழிவாளர் பேச்சை எதிர்த்தது ஏன்?: ஆசிரியர் சங்கர் விளக்கம்