பொன்னேரி: பொன்னேரி அருகே அண்ணாமலைச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 16 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இப்பள்ளிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் பல ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்று சென்றுவிட்டனர். அதன்பிறகு இப்பள்ளியில், அனைத்து பாடப்பிரிவுகள் உள்பட உடற்கல்விக்கு போதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களால், மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கேற்ப பாடங்கள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் போதிய ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வலியுறுத்தி, இன்று காலை அப்பள்ளியை 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post அண்ணாமலைச்சேரி அரசு பள்ளியில் ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.