சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 5.9 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 1.86 கோடி பேர் முதல் முறை சேவைகளையும், 4.07 கோடி பேர் தொடர் சேவைகளையும் பெற்று வருகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை 2021 ஆக.5-ல் கிருஷ்ணகிரி சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாதந்தோறும் மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.
The post மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 5.9 கோடி பேர் பயன் appeared first on Dinakaran.