×

குப்பை கிடங்கு வழக்கு: தேனி ஆட்சியர் பதில் தர ஆணை

மதுரை: அரசு சட்டக் கல்லூரி அருகே செயல்படும் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. கொட்டப்படும் கழிவுகளாலும், சில நேரங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் மாணவர்கள் அவதி அடைவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குப்பை கிடங்கை மாற்றக் கோரி மாணவர்கள் பலமுறை மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை. கழிவு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையால் விடுதி மாணவர்களுக்கு நோய் ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் குப்பை கிடங்கை மாற்றக் கோரி பலமுறை மனு அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், மனு குறித்து தேனி ஆட்சியர், நகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

The post குப்பை கிடங்கு வழக்கு: தேனி ஆட்சியர் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Government Law College ,Theni ,Dinakaran ,
× RELATED தேனி அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான...