×

நீல நிற சங்கு பூ ஜூஸ்

தேவையானவை:

ஒத்தை இதழ் நீல நிற சங்கு பூ – 20,
தேங்காய்ப்பால் – 50 மிலி,
தண்ணீர் – 100 மிலி,
நாட்டுச் சர்க்கரை – 4 ஸ்பூன்,
இஞ்சி துருவல் – 2 ஸ்பூன்,
பாதாம், முந்திரி, பிஸ்தா தலா – 4.

செய்முறை:

சங்கு பூவை நன்கு அலும்பி 200 மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இது நீலநிற கலரில் கிடைக்கும். அதனை ஆற வைத்து அதில் துருவிய இஞ்சி, சர்க்கரை, துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா கலந்து அத்துடன் 50 மிலி தேங்காய்ப்பால் சேர்த்து ஃபிரிட்ஜில் குளிரவைத்தும் குடிக்கலாம். அப்படியே குடிக்கலாம். மிகவும் ஆரோக்கியமான இந்த ஜூஸ் உடம்பிற்கு மிகவும் நல்லது.

The post நீல நிற சங்கு பூ ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனி கல் தொடாது கை!