×

துளசி ரசம்

தேவையானவை:

துளசி – கைப்பிடி,
புளித்தண்ணீர், பருப்புத்தண்ணீர் – தலா 1 கப்,
தக்காளி – 2,
மஞ்சள் தூள், மிளகு, சீரகம் – 1 ஸ்பூன்,
உப்பு – திட்டமாக.

தாளிக்க:

நெய் – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை.

செய்முறை:

தக்காளியை நறுக்கி உடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து புளித் தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்து புளிபச்சை வாசனை போனதும் பருப்பு தண்ணீர் சேர்க்கவும். மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போட்டு 1 கொதி விட்டு இறக்கி, நெய்யில் தாளிக்கவும். கடைசியில் துளசியைப் போட்டு உடனே ரசத்தை மூடிவிடவும். சளி பிடிக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் ரசமாகும்.

 

The post துளசி ரசம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED காலிஃபிளவர் புலாவ்