- ஃபால்குடம்
- காஞ்சிபுரம்
- முகநூல்
- காஞ்சிபுரம்
- நாகாத்தம்மன்
- செல்லியம்மன் கோயில்
- குருவிமலா
- அம்மன்
- எக்கோயில்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் நாளை வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக, கிராம இளைஞர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 8 வாலிபர்களின் புகைப்படத்துடன் பிறப்பால் லெபனான் நாட்டை சேர்ந்த பிரபல ஆபாச பாலியல் நடிகை மியாகலிபா புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
மியா கலிபா மஞ்சள் உடையுடன் பால்குடம் எடுப்பதுபோல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வைரலானதால், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றினர். இந்த சம்பவத்தால் குருவிமலை பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post காஞ்சிபுரம் அருகே பால்குடம் எடுப்பதுபோல் லெபனான் ஆபாச நடிகை புகைப்படம்: பேஸ்புக் வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.