×

தமிழக மீனவர்களுக்கு ₹1.20 கோடி அபராதம்: ராமதாஸ் கண்டனம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்யவேண்டும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை அரசு தலா ரூ. 40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது கண்டிக்கதக்கதாகும். எனவே இருநாட்டு மீனவர்களும் காலகாலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இலங்கை அரசிடம் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழக மீனவர்களுக்கு ₹1.20 கோடி அபராதம்: ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Thailapuram ,Viluppuram district ,Tamil Nadu ,Dimuka ,Sathiwari ,Ramdas ,Dinakaran ,
× RELATED ஐ.டி நடவடிக்கையால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி