- அமன் ஷெராவத்
- பாரிஸ் ஒலிம்பிக் மல்யத்த
- அமன்
- விளாடிமிர்
- வடக்கு மாசிடோ
- பாரிஸ் ஒலிம்பிக்
- பாரிஸ் ஒலிம்பிக் மல்
- தின மலர்
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறினார். வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த விளாடிமிரை 10-0 என்ற புள்ளி கணக்கில் அமன் வீழ்த்தினார். 57 கிலோ எடைப்பிரிவில் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர்களுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அமன், வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த விளாடிமிரை 10-0 என்ற புள்ளி கணக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதி சுற்றும் இன்றே நடைபெற உள்ளது. மல்யுத்த போட்டியை பொறுத்தவரை காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய 3 சுற்றுகளும் ஒரே நாளில் நடைபெறும். அடுத்த நாள் வெண்கல பாதகத்திற்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும்.
அந்த வகையில் முதல் சுற்று போட்டியில் அமன் வெற்றியை வசப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் வெற்றியை வசப்படுத்தினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்புள்ளது.
The post பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் அமன் ஷெராவத் appeared first on Dinakaran.