×

முதுநிலை நீட் தேர்வு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!!

டெல்லி: முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வினாத்தாள் வெளியாகி விற்பனைக்கு வந்ததாக தகவல் பரவியதை அடுத்து தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. முதுநிலை நீட் தேர்வை ஒரே அமர்வில் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறுகிறது என தலைமை நீதிபதி அமர்விடம் வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் முறையீடு செய்தார். தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பை குறுகிய அவகாசத்தில் வெளியிட்டதால் மாணவர்கள் அங்கு சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post முதுநிலை நீட் தேர்வு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...