- முன்னாள்
- முதல் அமைச்சர்
- புத்ததேவ் பட்டாச்சார்யா
- மேற்கு அமைச்சர்
- புத்த்தேவ் பட்டாச்சார்யா
- மேற்கு
- வங்கம்
- கம்யூனிஸ்ட்
- மேற்கு வங்கம்
- முன்னாள் மேற்கத்திய முதல்வர்
- தின மலர்
மேற்குவங்கம்: மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) காலமானார். 2000-2011 வரை மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராக இருந்தார். மேற்கு வங்கத்தின் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கடைசி முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆரசு காலத்தில் பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி CPM முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்தார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கொல்கத்தாவில் இன்று காலை 8.20 மணிக்கு காலமானார். 1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களில் இடதுசாரிகள் கூட்டணிதான் தொடர்ச்சியாக வென்று ஆட்சி செய்து வந்தனர்.
1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு ஆட்சி அமைத்தார். ஜோதிபாசுவுக்குப் பின்னர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் பட்டாச்சார்யா முதல்வர் பதவியை அலங்கரித்தார். 2011ம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி ஆட்சியை அமைத்து வருகிறார்.
The post மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) காலமானார் appeared first on Dinakaran.