×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சம்பவம் செந்திலை தேடி மும்பையில் தனிப்படை முகாம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்பவம் செந்திலை தேடி மும்பையில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 200 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொலையாளிகளின் செல்போன் அழைப்புகளை வைத்து இதுவரை 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ரவுடி சம்பவம் செந்திலை தேடி மும்பையில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் செந்திலை தேடி வந்த தனிப்படை போலீசார் தற்போது மும்பையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்பவம் செந்தில் குறித்து கூட்டாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். கட்டிட ஒப்பந்ததாரரை மிரட்டிய வழக்கில் ஈசாவை 3 நாட்கள் காவலில் எடுத்த போலீசார், ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்தும் விசாரித்துள்ளனர்.

சேலம் சிறையில் இருந்து ஈசாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் ஈசாவிடம் கேட்டறிந்தனர். சம்பவம் செந்திலின் மற்றொரு கூட்டாளியான எலி யுவராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் சிறையில் உள்ள யுவராஜை ஒப்பந்ததாரரை மிரட்டிய வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக யுவராஜுக்கு தெரிந்த தகவல்களை பெற்று விசாரணை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சம்பவம் செந்திலை தேடி மும்பையில் தனிப்படை முகாம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Mumbai ,Chennai ,Rawudi ,Bagujan Samaj Party ,Perambur, Chennai ,Sentili ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...