×

இனியும் போராட என்னிடம் வலிமை இல்லை.. ஓய்வு பெறுகிறேன்.. வினேஷ் போகத் உருக்கம்

டெல்லி: மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு எதிராக பாலியல் புகார் கூறிய வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராடியவர் வினேஷ் போகத். ஒலிம்பிக் போட்டியின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவரது தகுதிநீக்கம் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தகுதி நீக்கத்தை எதிர்த்த வினேஷ் போகத் மேல்முறையீடு மீது விளையாட்டு நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இந்நிலையில் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய துணிச்சல் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு குட் பை என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இனியும் போராட என்னிடம் வலிமை இல்லை.. ஓய்வு பெறுகிறேன்.. வினேஷ் போகத் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Vinesh Bogath ,DELHI ,VINESH BOGAH ,. J. K. M. B. Vinesh Bogath ,Brij Bhushan ,Women's Wrestling ,Olympic Games ,Vinesh Bogath Urumkam ,Dinakaran ,
× RELATED ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்..!!