×

வேலாயுதம்பாளையம் அருகே பாத்ரூமில் மயங்கி விழுந்து டிஎன்பிஎல் ஊழியர் பலி

வேலாயுதம்பாளையம், ஆக. 8: கரூர் மாவட்டம் தொண்டமங்கலம் சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (58). இவர் புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது ஆறுமுகம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். லோடுமேன் ஆறுமுகம் கழிவறைக்குச் சென்று நீண்ட நேரம் வராததால் உடன் வேலை பார்ப்பவர்கள் கழிவறைக்கு சென்று பார்த்த போது ஆறுமுகம் கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் .உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி அஞ்சலி (50) என்பவர் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆறுமுகம் திடீரென கீழே விழுந்து இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

The post வேலாயுதம்பாளையம் அருகே பாத்ரூமில் மயங்கி விழுந்து டிஎன்பிஎல் ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : TNBL ,Velayuthampalayam ,Arumugam ,Thondamangalam Sukambatti ,Karur district ,DNPL ,Buklore ,Dinakaran ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்கல்