×

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மனுக்களை பெற்றார்

கிருஷ்ணராயபுரம், ஆக.8: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் ஆகிய ஊராட்சிக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் எம்எல்ஏ. சிவகாமசுந்தரி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கிருஷ்ணராயபுரம் தாசில்தார். மகேந்திரன் , தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஏடி. சரவணன், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன். சுமித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ. சிவகாமசுந்தரி, தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, கல்வி துறை, காவல் துறை என 15 துறைகள் சார்ந்த 44 சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பெற்று கணினியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டது. இம்முகாமில் 600 க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர். ரவி ராஜா, ஊரா ட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ,வார்டு உறுப்பினர்கள் ,பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மனுக்களை பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister Special Camp ,MLA ,Sivakamasundari ,Krishnarayapuram ,West ,Union ,Balarajapuram Renkanathapuram Panchayat ,Krishnarayapuram West Union ,Tahsildar ,Mahendran ,District Rural Development Department ,Chief Minister Special ,Camp MLA ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 10 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்