×

விடுதலை சிறுத்தை கட்சி கொடி அகற்றி விளம்பரம் அழிப்பு

கடலூர், ஆக. 8: விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தில் இருந்து கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நேற்று காலை பார்த்த போது கொடியை காணவில்லை. அந்த கொடியை யாரோ கம்பத்தில் இருந்து அகற்றி கீழே போட்டு சென்றுள்ளனர்.

மேலும் அதன் அருகே இருந்த சுவற்றில் எழுதப்பட்டிருந்த விளம்பரத்தின் மீது யாரோ கருப்பு பெயிண்ட் அடித்து அழித்துள்ளனர். தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து முறைப்படி புகார் அளியுங்கள், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை கேட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post விடுதலை சிறுத்தை கட்சி கொடி அகற்றி விளம்பரம் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers Party ,Cuddalore ,Liberation Tigers of ,India ,Semmankuppam ,Cuddalore Muthunagar ,Dinakaran ,
× RELATED ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க...