×

அணிக்கொரை அரசுப் பள்ளியில் குறுமைய அளவிலான சதுரங்க போட்டி

ஊட்டி, ஆக. 8: ஊட்டி குறு மைய அளவிலான சதுரங்க போட்டிகள் அணிக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகள் குறு மைய அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் பின்பு மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நீலகிரி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவிறுத்தலின் பேரில் ஊட்டி குறுமைய அளவில் அணிக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் 2ம் சுற்று போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

The post அணிக்கொரை அரசுப் பள்ளியில் குறுமைய அளவிலான சதுரங்க போட்டி appeared first on Dinakaran.

Tags : Team Korai Government School ,Ooty ,Ooty Central Level Chess Tournaments ,Tikkorai Government ,High School ,Nilgiri ,
× RELATED பராமரிப்பின்றி காணப்படும் சாலையோர மரக்கன்றுகள்