×

பஞ்சகுஸ்தி போட்டியில் சாதனை படைத்த கேரள அணிக்கு உற்சாக வரவேற்பு

பாலக்காடு, ஆக. 8: ராய்பூரில் தேசிய அளவிலான 46வது பஞ்சகுஸ்தி போட்டி நடைபெற்றது. இதில், 408 புள்ளிகள் பெற்று கேரள வீராங்கனைகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மகளிர் பிரிவினர் 156 புள்ளிகளும், ஆண்கள் பிரிவினர் 252 புள்ளிகளும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். ஜூனியர் பிரிவில் ஆதுல்யா ஷிபுவும், சீனியர் பிரிவில் அனாமிகா ராஜேஷூம் சிறந்த ஆட்டக்காராக விளங்கினர்.

கேரள அணியினர் நேற்று ஊர் திருப்பினர். அவர்களுக்கு பாலக்காடு ரஸிலிங்க் சங்க தலைவர் முகமது ராபி தலைமையில் பாலக்காடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட பாக்ஸிங் சங்க துணைத்தலைவர் ஹரிதாஸ், துணை செயலாளர் சிஜேஷ், காசாளர் அப்ஷல், பிரவாசி காங்கிரஸ் மாநில தலைவர் ஷரீப், பாலக்காடு நாஷணல் ரப்ரி சுபைர், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பஞ்சகுஸ்தி போட்டியில் சாதனை படைத்த கேரள அணிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Palakkad ,46th National Panjakushti Tournament ,Raipur ,
× RELATED தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு...