×

மக்கள் குறை தீர்ப்பு முகாம்

கோவை, ஆக. 8: கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக 93 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 61 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 11 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது. இதில், மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறை தீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Camp ,Coimbatore ,People's Grievance Adjudication Camp ,Coimbatore District SB ,Office ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் முகாம் மாவட்ட எஸ்பி பங்கேற்பு