×

ஆறுமுகநேரி சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் தின விழா

ஆறுமுகநேரி, ஆக. 8: ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக தாய்ப்பால் தினவிழா நடந்தது. மருத்துவ அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் ஜூலியட் முன்னிலை வகித்தார். விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன், பகுதி சுகாதார செவிலியர் மாலையம்மாள், சித்த மருத்துவர் நந்தினி, மாவட்ட சுகாதார புள்ளியாளர் அமுதா, கிராம சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள், கர்ப்பிணிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆறுமுகநேரி சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் தின விழா appeared first on Dinakaran.

Tags : Breastfeeding Day ,Arumuganeri Health Centre ,Arumuganeri ,World Breastfeeding Day ,Arumuganeri Primary Health Center ,Medical Officer ,Srinivasan ,District Child Welfare Officer ,Juliet ,Breastfeeding Day Ceremony ,Arumukaneri Health Center ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...