×

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அருண்ராஜ் தகவல்

செங்கல்பட்டு, ஆக. 8: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலைமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024ல் பங்கேற்க இணையதள முன்பதிவை கடந்த 4ம் தேதி தொடங்கி வைத்தார்.மாணவ – மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ₹1 லட்சம், இரண்டாம் பரிசாக ₹75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹50 ஆயிரம் வழங்கப்படும்.

குழு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா ₹75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ₹50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ₹25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன்முறையாக நான்காம் இடம் பெற்றவருக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது. 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 முதல் 19 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட இம்மாதம் 25ம் தேதி கடைசி நாளாகும். எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்திட வேண்டும்.

இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தாங்களாக தங்கள் பள்ளி கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலோ அல்லது 044-2723 8477 என்ற தொலைபேசி (அல்லது) 74017 03461 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அருண்ராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup Games ,Chengalpattu District ,Arunraj ,Chengalpattu ,Collector ,Youth Welfare and ,Sports Development Minister ,Udayanidhi Stalin ,
× RELATED சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பை...