×

குட்கா விற்ற வாலிபர் கைது

ஓசூர், ஆக.8: ஓசூர் டவுன் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சையத் அப்துல் காதர்(23) என்பதும், குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ₹3,365 மதிப்பிலான 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post குட்கா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Hosur ,Town ,Syed Abdul Khader ,Ambasamudram Taluk Wickramasinghapuram, Nellai District ,Dinakaran ,
× RELATED லாலாபேட்டையில் குட்கா விற்ற ஒருவர் மீது வழக்கு