×

ஜி.ெஹச்சில் கைதி அட்மிட்

சேலம், ஆக.8: சேலம் அஸ்தம்பட்டி மேற்குவீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் தீபக் (எ) ராம் தீபக்(22). இவரை அஸ்தம்பட்டி போலீசார், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். நேற்று முன்தினம், தீபக்கிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது போலீஸ் பாதுகாப்புடன், தீபக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஜி.ெஹச்சில் கைதி அட்மிட் appeared first on Dinakaran.

Tags : G.H. Salem ,Matheswaran ,Astampatty West Road, Salem ,Deepak (A) Ram Deepak ,Astampatty police ,Salem Central Jail ,Deepak ,
× RELATED அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது