×

சந்து கடையில் மது விற்றவர் கைது

கெங்கவல்லி, ஆக. 8:கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி, 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி எஸ்ஐ செந்தில்குமரன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்திரா காலனி பகுதியை சேர்ந்த பழனிமுத்து மகன் பிரபு(38) என்பவர் வீட்டில் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பிரபுவை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post சந்து கடையில் மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Athur ,DSP ,Sathish Kumar ,Tasmac ,Kengavalli SI Senthilkumaran ,Dinakaran ,
× RELATED சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில்...