×

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, ஆக.8: வீரகனூர் அடுத்த கிழக்கு ராஜாபாளையம் அழகுவேல் மகன் ராஜபாண்டி(29). இவர் பிஏ பிஎட் படித்து விட்டு, திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தொண்டை பாடியை அழகுவேல் மகள் அகல்யா(21), பிஎஸ்சி படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். ஏற்கனவே ராஜபாண்டி அகல்யாவை பெண் பார்த்து சென்ற நிலையில், அரசு வேலை மாப்பிள்ளை வந்ததால், அவரது பெற்றோர் பெண் தர மறுத்து விட்டனர். இந்நிலையில், காதலித்து வந்த ராஜபாண்டி, அகல்யா சமயபுரத்தில் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு வீரகனூர் போலீசில் தஞ்சமடைந்தனர். அகல்யாவின் பெற்றோர் ஏற்க மறுத்ததால், கணவர் ராஜபாண்டியுடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,eastern Rajapalayam ,Alakuvel ,Rajabandi ,BA ,Trichchi ,Perambalur District ,Veppanthata Throat Badi Aghuvel ,Agalya ,
× RELATED வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு மீட்பு