×

பேரணாம்பட்டில் நள்ளிரவில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம் பூ

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க. நகரில் வசிப்பவர் மார்கபந்து (65), ஓய்வுபெற்ற அஞ்சலக ஊழியர். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். இந்த செடி இமயமலைகளில் மட்டுமே பூக்கக்கூடியது. இதனை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைப்பதோடு, நோய் நொடியின்றி வாழலாம் என்பது நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் இந்த பூ சுமார் 1 மணிநேரத்தில் உதிரும் தன்மை கொண்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மார்கபந்து வீட்டில் பிரம்ம கமலம் பூ பூத்துக்குலுங்கியது. இதனைக்காண அக்கம் பக்கத்தினர் திரண்டு பூச்செடிக்கு பூஜை செய்து வணங்கினர்.

The post பேரணாம்பட்டில் நள்ளிரவில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம் பூ appeared first on Dinakaran.

Tags : Brahma Kamalam Bhu ,Beranamtab Ryanampattu ,Vellore ,V. K. ,Margabandu ,Brahma Kamalam ,Himalayas ,Ranampatil ,
× RELATED விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில்...