- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- வினேஷ் போகாட்
- மு.கே ஸ்டாலின்
- ஒலிம்பிக் தொடர்
- பாரிஸ்
- மு.கே ஸ்டாலின்
சென்னை : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் அனைத்து வகையிலும் உண்மையான சாம்பியன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் (29 வயது), பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். ஆனால் அவருக்கு இன்று உடல் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 50 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “வினேஷ், நீங்கள் எல்லா வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ரு சில கிராம் கணக்கிற்காக தகுதியிழப்பு செய்ததால் உங்கள் உத்வேகத்தையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒரு சில கிராம் கணக்கிற்காக தகுதியிழப்பு செய்ததால் உங்கள் உத்வேகத்தையும் சாதனைகளையும் குறைக்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.