பாரிஸ்: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த விளையாட்டில் இறுதி சுற்று வரை வினேஷ் போகத் முன்னேறியிருந்த நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை அடுத்து ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு;
1. ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி நாளின் காலையில் உடல் எடை பரிசோதனை நடைபெறும்.
2. முந்தைய நாளில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற வீரர்கள் பங்கேற்க முடியாது.
3. சிங்லெட் எனப்படும் மல்யுத்த உடையில் தான் வீரர்கள் பங்கேற்க வேண்டும்.
4. வீரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் உடல் எடையை சோதித்துக் கொள்ளலாம்.
5. ரெபிசேஜ், இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 2வது நாளும் சோதனையில் பங்கேற்பர்.
6. வீரர்கள் அந்தந்த பிரிவுக்கான எடையில் இருப்பதை நடுவர்கள் உறுதி செய்வர்.
7. நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
8. நேற்று நடைபெற்ற சோதனையில் வினேஷ் போகத்தின் எடை சரியாகவே இருந்தது.
9. எலக்ட்ரோலைட் போன்ற பானங்களால் வினேஷின் எடை கூடியிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியாவுக்கு வாய்ப்புகள் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
The post எலக்ட்ரோலைட் பானங்களால் வினேஷின் எடை அதிகரிப்பா?: ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான விதிகள் சொல்வது என்ன? appeared first on Dinakaran.