×

நீங்கள் எப்போதும் நாட்டின் பெருமை; முழு நாடும் உங்களுடன் நிற்கிறது: வினேஷ் போகத்துக்கு தலைவர்கள் ஆதரவு குரல்!!

டெல்லி: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த விளையாட்டில் இறுதி சுற்று வரை வினேஷ் போகத் முன்னேறியிருந்த நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி:
ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெருமை. நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்; முழு நாடும் உங்களுடன் நிற்கிறது. தகுதிநீக்க முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு:
ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். தகுதி நீக்கம் வருத்தம் அளித்தாலும் இந்திய மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக திகழ்கிறார் வினேஷ் போகத். வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனை ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்தது. தகுதிநீக்கம் ஏமாற்றமளித்தாலும், 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார் என திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா:
வினேஷ் போகத் பின்னடைவு கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த துரதிர்ஷ்டம் அவரது வாழ்க்கையில் ஒரு தடை மட்டுமே. ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் பின்னடைவு மில்லியன் கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை நிச்சயமாக உடைத்துவிட்டது. உலக சாம்பியனை தோற்கடித்த பெருமையுடன் பிரகாசிக்கும் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வாழ்க்கையைக் கொண்டுள்ளார். இந்த துரதிர்ஷ்டம் அவரது துரதிர்ஷ்டவசமான வாழ்க்கையில் ஒரு விதிவிலக்கு மட்டுமே, அதில் இருந்து அவர் எப்போதும் வெற்றியாளராக இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களின் வாழ்த்துகளும் ஆதரவும் அவளுக்கு எப்போதும் உண்டு என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

The post நீங்கள் எப்போதும் நாட்டின் பெருமை; முழு நாடும் உங்களுடன் நிற்கிறது: வினேஷ் போகத்துக்கு தலைவர்கள் ஆதரவு குரல்!! appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhogat ,Delhi ,Vinesh ,Wrestling Games ,Olympics ,Paris ,Dinakaran ,
× RELATED வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தோல்வி;...