×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், ஆக.13-ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஆக.13ம் தேதி நடைபெற உள்ளது. முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், ஆக.13-ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Tamil Nadu Cabinet ,Chennai ,United States ,World Investor Conference ,Chief Minister K. ,
× RELATED ஓணம் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து