×

100 கிராம் கூடுதல் எடையால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்: ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பு பறிபோனது!

பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம்செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் (29 வயது), பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். இந்த நிலையில், 50 கிலோவை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் என ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. 2 கிலோ கூடுதலாக இருந்த எடையை கடுமையான உடற்பயிற்சி மூலம் 1.900 கிலோ வரை குறைத்தார். இரவு முழுவதும் ஸ்கிப்பிங், சைக்கிளிங் உள்ளிட்ட உடற்பயிற்சி மேற்கொண்டும் வினேஷ் போகத்தால் எஞ்சிய 100 கிராம் எடையை குறைக்க முடியவில்லை. கூடுதலாக உள்ள 100 கிராம் எடையை குறைக்க சற்று அவகாசம் கேட்ட நிலையில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தர மறுத்து அவரை தகுதி நீக்கம் செய்தது.

மல்யுத்த போட்டி விதிகளின்படி 50 கிலோ எடைப்பிரிவில் கூடுதல் எடை உள்ளதால் வெள்ளிப் பதக்கம் கூடவினேஷுக்கு தரப்பட மாட்டாது. இதனால் மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது. பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு எதிராக பாலியல் புகார் கூறிய வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராடியவர் வினேஷ் போகத். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அமெரிக்க வீராங்களை சாராவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

The post 100 கிராம் கூடுதல் எடையால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்: ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பு பறிபோனது! appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhoga ,Olympics ,Paris ,Vinesh Bhogat ,Paris Olympics ,Vinesh Phogat ,Olympic ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு