ஆய்வின் போது மாணவர்களிடம் கல்வி அளிக்கப்படும் விதம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மையத்தில் கல்வி பெரும் சிறப்பு குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி, உடற்பயிற்சிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், 10, 12ம் வகுப்பு மாணவர்களிடம் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் சங்கரன்கோவில் வட்டார அளவிலான செஸ் போட்டியை பார்வையிட்டார். ஆய்வின்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், வட்டார கல்வி அலுவலர் அந்தோணி ராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம், ஆசிரியர்கள் சங்கர்ராம், ஆத்திவிநாயகம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
அமைச்சர் நெகிழ்ச்சி
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். அங்கு ஒரு குழந்தை பார்வையற்ற நிலையில் அங்கு பயின்று வருகிறது. அந்த குழந்தை ஏற்கனவே ராஜா எம்எல்ஏ நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பங்கேற்றது மற்றும் அந்த குழந்தைக்கு திருக்குறள் நன்றாகத் தெரியும் என்பதால் ராஜா எம்எல்ஏ அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜா எம்எல்ஏ அந்த குழந்தையை பலமுறை சந்தித்து தேவையான உதவிகளை செய்துள்ளார்.
இந்நிலையில் ஆய்வுக்கு அமைச்சர் வந்தபோது அங்குள்ள ஆசிரியர்கள் யார் வந்து இருக்கிறார்கள் என்று கேட்டபோது எம்எல்ஏவின் சத்தத்தை கேட்ட அந்த குழந்தை ராஜா எம்எல்ஏ வந்துள்ளார் என்று கூறியது. இதனைக் கண்ட அமைச்சர் நெகிழ்ச்சி அடைந்தார்.
The post சங்கரன்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.