×

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி, தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மீனவர் அமைப்பினர் நேற்று மாலை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் நேரில் சந்தித்தனர். அப்போது, கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளனர். பின்னர் கனிமொழி எம்.பி அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுகின்றனர். மேலும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.

தற்போது வரை 80க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். 170-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை வசம் உள்ளன. மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சரை வலியுறுத்தினோம். மீனவர்கள் விவகாரத்தில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை உடனடியாக நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post இலங்கை சிறைபிடித்த மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் கனிமொழி எம்.பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Lanka ,Kanimozhi MP ,Foreign Minister Jaishankar ,New Delhi ,DMK Parliamentary Committee ,Tamil Nadu ,Fisheries Minister ,Anitha Radhakrishnan ,Union External Affairs Minister ,Jaishankar ,Delhi ,Sri Lanka ,Kanimozhi ,Foreign Minister ,
× RELATED தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!!