×

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

புதுச்சேரி, ஆக. 7: புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான சிவா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

The post வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Aadipur Chariot ,Willianur Thirukameeswarar Temple ,Puducherry ,Aadipura festival ,Villayanur Gokilambikai Sametha Thirukameeswarar temple ,
× RELATED பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது