×

சேவல் சூதாட்டம்; 8 பேர் கைது

வெள்ளக்கோவில், ஆக. 7: வெள்ளக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதுப்பை கரைபாலம் அருகே காசு வைத்து சேவல் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (44), சின்னத்தம்பி (31), பாலுசாமி (41), ஜனகரத்தினம் (32), கார்த்திகேயன் (52), கார்த்திக் (25), செல்வகுமார் (47), முருகானந்தம் (50), ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 2 சேவல்கள், ரூ.3 ஆயிரத்து 850 கைப்பற்றினர். இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேவல் சூதாட்டம்; 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rooster Gambling ,Vellakovil ,Balasubramani ,Chinnathambi ,Baluswamy ,Janakaratnam ,Karthikeyan ,Karthik ,Puduppai Karaibalam ,Dinakaran ,
× RELATED முருங்கை 13 டன் வரத்து கிலோ ரூ.10 க்கு விற்பனை