×

மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (38). பெயிண்டரான இவர் கடந்த 4ம் தேதி புளியங்குண்டா கிராமத்தில் கோசாலைக்கு பெயின்ட் அடிக்கச் சென்றார். இரவில் வெளிச்சத்திற்காக தரையில் இருந்த தற்காலிக மின்விளக்கை கையில் எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்‌. அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதில் குமாரின் மனைவி செண்பகவல்லி கொடுத்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Kumar ,Palayanur village ,Tiruvalankadu ,Tiruvallur district ,Gosala ,Buliangunda ,
× RELATED நட்புக்காக உயிரையே கொடுப்போம்.. அடிவாங்க மாட்டோமா என்ன?" - Sasi kumar Speech at Nandhan Audio Launch