×

லாரி மீது அரசு பஸ் மோதல்: 15 பயணிகள் காயம்

திருவள்ளூர்: செங்கல்பட்டில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் திருவள்ளூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் திருவள்ளூர் ஆயில் மில் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று திடீரென பிரேக் பிடித்ததால் அரசு பஸ் அந்த லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் பஸ்சில் இருந்த 15 பயணிகள் லேசான காயமடைந்தனர். இதை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

The post லாரி மீது அரசு பஸ் மோதல்: 15 பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Chengalpattu ,Tiruvallur Oil Mill Road ,Dinakaran ,
× RELATED அனுமதியற்ற கல்வி நிறுவன...