- பொன்னேரி, ஆர்.கே
- பெட்டி
- ஆர்.கே. பத்தா
- பாலாவேக்காடு
- பொன்னேரி
- சட்டமன்ற உறுப்பினர்
- துரை.சந்திரசேகர்.
- புறக்கோட்டை
- தின மலர்
ஆர்.கே.பேட்டை: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமினை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் துவக்கி வைத்தார். இந்த முகாமில் அதிகபட்சமாக முதியோர் ஓய்வூதியத்திற்கும், மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்ப மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், குமார், மேலாளர் லீல் பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர்கள் பழவேற்காடு மாலதி சரவணன், கோட்டைகுப்பம் சம்பத், லைட் ஹவுஸ் கஜேந்திரன், தாங்கல் பெரும்புலம் ஞானவேல், அவுரிவாக்கம் முத்தழகி ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் தமின்சா, கதிரவன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்கே பேட்டை : ஆர்.கே.பேட்டை அருகே வெள்ளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ திருத்தணி எஸ்.சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முகாமில் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் பாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஒன்றிய திமுக செயலாளர் பழனி, சண்முகம், ஒன்றியக்குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேர்வாய், பூவலம்பேடு, பாதிரிவேடு, எளாவூர், பெரிய ஒபுளாபுரம், தேர்வழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களுடன் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி ஆணையர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஷ்வரி, வட்டாட்சியர் சரவணகுமாரி, ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் முனிவேல், வெங்கடாசலபதி, சீனிவாசன், லாரன்ஸ், மகோவிந்தசாமி, ரவி,முர்த்தி மத்மஜா கௌரிசங்கர், செவ்வந்தி மனோஜ், ஜீவா செல்வம், வள்ளியம்மாள் பழனி, கிரிஜா குமார், அமிர்தம்வேணு, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 3 ஆயிரம் மனுக்களைப் பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.அதில் ஒரு சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. திமுக நிர்வாகிகள் ரமேஷ், ரவி, மாதர்பாக்கம் குணசேகரன், மணிபாலன், பரிமளம், அறிவழகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
The post பொன்னேரி, ஆர்கே பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.