×

ஸ்டீபிள்சேஸ் பைனலுக்கு முன்னேறினார் அவினாஷ்

ஆண்கள் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய ராணுவ வீரர் அவினாஷ் சேபிள் தகுதி பெற்றார். 28 தடைகளை தாண்டி, தண்ணீர் மீது தாவி ஒடும் கடினமான இப்போட்டியில், அவினாஷ் பந்தய தூரத்தை 8 நிமிடம், 15.43 விநாடிகளில் கடந்து ஹீட்-2ல் 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். ஆண்கள் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

The post ஸ்டீபிள்சேஸ் பைனலுக்கு முன்னேறினார் அவினாஷ் appeared first on Dinakaran.

Tags : Avinash ,Indian Army ,Avinash Sable ,Dinakaran ,
× RELATED துரந்த் கோப்பை கால்பந்து முதல் முறையாக நார்த்ஈஸ்ட் சாம்பியன்